தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சிறப்பு பெற்ற ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் 98 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியில் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 98 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இப்பெருவிழா வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. விழா தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மீண்டும் கெபியை வந்தடைந்தது.

பின்னர் அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் பெருவிழா கொடியேற்றினார். பின்னர் அருள் மறை உரையாற்றினார். கொடியேற்ற நிகழ்ச்சியில் அருட்தந்தைகள், ஊர் நல கமிட்டி நிர்வாகிகள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி 27 ம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர் ஊர்நலக்கமிட்டினர், இறை மக்கள் செய்திருந்தனர்.



வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.