விடத்தண்டலம் அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  திரளான   பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தாங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர் .


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம்  விடத்தண்டலம் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ  நாகாத்தம்மன் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  கடந்த 14 ஆம் தேதி  காப்பு கட்டி கரகம் எடுத்து எல்லையம்மனுக்கு அபிஷேகம் பொன்னியம்மன் அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தீமிதித்து  தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.  அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை விடத்தண்டலம்     இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 

இதில் சிறப்பு அழைப்பாளர் மெதூர் கூட்டுறவு சங்க செயலாளர் சசிக்குமார், விடத்தண்டலம் கிராம தர்மகர்த்தா V.P. வினாயகமுதலியார், ஜெயம் ரமேஷ், G. கண்ணன், V.ராஜேஷ், V. கோபி, முன்னாள் வார்டு உறுப்பினர் மேஸ்திரி குமார் கோவில் அர்சகர் சோனு உள்ளிட்ட கிராம மக்கள்  திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related

“விமர்சையாக நடைபெற்ற கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் 816 ம் ஆண்டு பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு”