அருள்மிகு ஸ்ரீ    எல்லையம்மன் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  120 க்கும் மேற்பட்ட  பக்தர்கள் விரதம் இருந்து  தீ மிதித்து தாங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பெரிய காட்டவூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 8 ம் ஆண்டு தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த  14 ஆம் தேதி பந்தக்கால் உடன் தொடங்கி   காப்பு கட்டுதல், வாடை பொங்கல், தீபாரத்தனை, அம்மன் அழைப்பு உள்ளிட்டவை நடைபெற்றது அதனை   தொடர்ந்து  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை   சுமார் 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

 அதன் பின்னர் தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தீமிதித்து தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம்  ஏற்படா வகையில் பொன்னேரி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியை  பெரிய காட்டவூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள்  செய்திருந்தனர். 10 நாட்கள் உபயதார்கள் வேலு வகையார், முனுசாமி வகையார், மூர்த்தி வகையார், மணி வகையார், குமாரப்பன் வகையார், கருணாநிதி வகையார், பாபு வகையார், எல்லப்பன் வகையார் குமாரன் வகையார் செய்திருந்தனர்.

 எல்லையம்மன் சாத்துபடி கிராம பொதுமக்கள் பச்சையம்மன் சாத்துபடி அர்ஜுனன் மஞ்சுளா அன்னதானம் உபயம் அப்புன்ராஜ், சங்கர், குமார், திவாகர்,கிராம நிர்வாகிகள் ரமேஷ், மூர்த்தி, குருமூர்த்தி, முரளி, பத்திரிக்கை அன்பளிப்பு கார்த்திக், வேதா, வி எம் கே பிரதர்ஸ் இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது   பின்னர் கண் கவர் வான வேடிக்கை நடைபெற்றது.

Related

“பெருநகர் அங்காளம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ”