தேனி: சின்னமனூர் அருகே பிரபல ஆன்மீக ஸ்தலமான சுடலை மாடசாமி கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கும்மியடித்து வழிபாடு செய்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில். நூற்றாண்டு பழமையான இக்கோயில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக இரண்டு கால யாக பூஜைகள் கோ பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி பட்டாச்சார்யர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

பின்னர் சுடலை மாடசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் கும்மியடித்து சுவாமியை வழிபட்டனர். இந்நிகழ்வில் சீப்பாலக்கோட்டை மற்றும் சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.