சிவகங்கை அருகே சாமியார்பட்டி ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சாமியார் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக சிவபெருமான் சப்த கன்னிமார் அம்மன் மற்றும் பாம்பாட்டி சித்தருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து ஏராளமான பெண்கள் அம்மன் கும்மி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர் பின்னர் மூலவர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு புதுப்பட்டு சேலை அணிவித்து வண்ணமலர் மாலைகள் எலுமிச்சை மாலை விரலி மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து அம்மனுக்கு இனிப்பு வகைகள் பழங்கள் நெய்வேதியம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டன இதனை அடுத்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது நிறைவாக உதிரி புஷ்பங்கள் குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.