கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்நத சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபியை முன்னிட்டு நடத்தப்பட விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு 50 ஆயிரம் புரோட்டா பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி  சுங்கச்சாவடி அருகே சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில் ஆண்டுத் தோறும் மிலாடி நபி முன்னிட்டு சிறப்பு துவா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மிலாடி நபி விழா சிறப்பாக நடைபெற்றது.

 சங்கல் தோப்பு தர்கா கமிட்டி தலைவர் நவாப், மஸ்தாணி அம்மா மற்றும் பாபு ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது தர்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு துவா மற்றும் பாத்தியாவும் நடத்தப்பட்டது.

மிலாடி நபி விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் குப்பம் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் ஏராளமான மக்கள் சாதி, மத வேறுப்பாடுகள் இன்றி எந்த விதமான நோய் நொடிகள் இன்றி சுபச்சமாக வாழ வேண்டியும், நல்ல மழை பெய்து ஏரி, குளம், குட்டைகள் நிரப்பி விவசாயம் செழித்திட வேண்டி வழிப்பட்டனர்.

மேலும இந்த மிலாடி நபி விழாவில் சுமார் 2 டன் மைதாமாவில் 50 ஆயிரம் புரோட்டா தயார் செய்யப்பட்டு இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் தர்கா கமிட்டி செயலாளர் ஹாஜி கோஸ் சாஹாப் , துணைத் தலைவர் ஜாவித், பொருளாளர் அதாவுல்லா, மீசைகாரன் அமானுல்லா  மற்றும் தர்காவில் நிர்வாகி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related

“விமர்சையாக நடைபெற்ற கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் 816 ம் ஆண்டு பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு”