கிருஷ்ணகிரி கட்டிக்கான பள்ளி மேல்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் 316 ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிப் பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி கட்டிக்கான பள்ளிமேல்புதூரில் அமைந்துள்ள
ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் 316-ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது,
ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் ஆடிப்பூரத் திருவிழாவில்
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும், கற்பூரத் தீபாதரனைகள் மட்டுமின்றி அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் வைத்தும் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைப்பெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய விழாவில் ஒன்றான அம்மன் கரகத்துடன் கீழ்புதூர் காளியம்மன்,
மேல்புதூர் மாரியம்மன் பெருமாள் நகர் முத்துமாரியம்மன் ஆகிய கிராம தெய்வங்கள் புஸ்ப பல்லாக்கில் எழுத்தருளிய நிலையில் திருவீதி உலா நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி,கட்டிக்கான பள்ளி, கீழ்புதூர், மேல் புதூர்,பெருமாள் நகர், மோட்டூர்,லைன் கொல்லை,மேல் சோமார்பேட்டை,கீழ்சோமார் பேட்டை,நாயுடுதெரு,ஆனந்த் நகர்,எம்ஜிஆர் நகர்,புதிய வீட்டு வசதி வாரியம்,ராஜாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் விழாவில் பங்கு பெற்றன.
.கிராமங்கள் வழியாக சென்ற அம்மன் திருவீதி உலா
ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவில் நிறைவடைந்தது.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கியது,
இதனை அடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் தீ குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
பின்னர் திருக்கோவில் பூசாரிகள் மூலம் தீய சத்திகள் மற்றும் பேய் விரட்டும் வினோத வழிப்பாடு நடைப்பெற்றது, ஆலய நிர்வாகிகள்,விழாக் குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக செய்து இருந்தன

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.