சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து ஆதரவு கோரி கடிதம் வழங்கினர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கோரி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்து முறைப்படி கடிதம் வழங்கினர்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நேரு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அங்கு தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு கடிதத்தை நேரில் வழங்கினர்.
சந்திப்பின் போது, இரு கட்சி நிர்வாகிகளும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.