தென்காசி: இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக மாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு மீண்டும்‌ வாக்குச் சீட்டு முறைக்கு தேர்தல்‌ மாற்றியமைக்கப்பட வேண்டும்‌ என  தமுமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு முஸ்லிம்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தலைமை செயற்குழு தென்காசி மாவட்டம்‌ குற்றாலத்தில்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ எம்‌.எச்‌.ஜவாஹிருல்லா எம்‌எல்‌ஏ தலைமையில்‌ நடைபெற்றது. தென்காசி மாவட்டம்‌ இலஞ்சியில்‌ உள்ள டிரிசிள்‌ ரெசிடென்சி மண்டபத்தில்‌ நடைபெற்ற இக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்‌ வருமாறு: 

சமுதாயத்தின்‌ முன்மாதிரி ஆளுமையாகவும்‌ தமுமுகவின்‌ தொடக்க காலம்‌ தொட்டு தன்‌ வாழ்வின்‌ இறுதிவரை துணை நின்றத்‌ தூணாகவும்‌ சமுதாயப்‌ புரவலராகவும்‌ மார்க்க அறிஞராகவும்‌ பன்னாட்டுத்‌ தொழிலதிபராகவும்‌ திகழ்ந்த  தலைமை நிர்வாகக்‌ குழு உறுப்பினர்‌ மெளலவி எஸ்கேஎஸ்‌ சம்சுதீன்‌ ஹழரத்‌ அவர்களின்‌ மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவிக்கிறது. தமிழகத்தில்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப்‌ விஜய்‌ தலைமையிலான அரசுக்கு இச்‌ செயற்குழு நல்வாழ்த்துக்களைத்‌ தெரிவிக்கிறது. சமூகநீதி, பாசிச எதிர்ப்பு, மாநில உரிமைகள்‌ பாதுகாப்பு, இருமொழிக்‌ கொள்கை, உள்ளிட்ட கருத்தியல்களில்‌ திமுக அரசு போட்டுத்‌ தந்த தடத்தில்‌ இவ்வரசும்‌ தடம்‌ மாறாமல்‌ பயணித்து தமிழ்நாட்டின்‌ நலன்‌ காக்க வேண்டும்‌ என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்‌ போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு குறிப்பாக நாகப்பட்டினம்‌ மற்றும்‌ மணப்பாறை தொகுதியில்‌ போட்டியிட்ட மனிதநேய மக்கள்‌ கட்சியின்‌ வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல்‌ பணிகளை செய்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணி கட்சிகளின்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ தொண்டர்களுக்கும்‌ வாக்களித்த மக்களுக்கும்‌, தமுமுகவின்‌ அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்‌. இச்செயற்குழு நெஞ்சார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்து கொள்கிறது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பின்‌ அடிப்படைக்‌ கூறுகளான மதச்சார்பின்மை, சமத்துவம்‌, மதச்சுதந்திரம்‌ மற்றும்‌ சிறுபான்மையினரின்‌ அரசியலமைப்புச்‌ சட்ட உரிமைகளைப்‌ பாதுகாப்பது உயரிய கடமையாகும்‌.

இஸ்லாத்தை நமது வாழ்வியல்‌ நெறியாக ஏற்றுக்‌ கொள்ளும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோருக்கான இடஓதுக்கீட்டு உரிமை தொடர்பான அரசாணை எண்‌ 31-ஐ ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ நீதியரசர்கள்‌ ஜி.ஆர்‌. சுவாமிநாதன்‌ - பாலாஜி அமர்வின்‌ தீர்ப்பு ஏற்கனவே அதே அரசாணையின்‌ செல்லுபடித்தன்மையை உறுதி செய்திருந்த நீதிபதிகள்‌ எம்‌.எஸ்‌. ரமேஷ்‌ மற்றும்‌ சக்திவேல்‌ அமர்வின்‌ தீர்ப்புக்கு முரணாக அமைந்துள்ளதால்‌, இது நீதித்துறை ஒழுங்குமுறை மற்றும்‌ முன்னுதாரணத்‌ தீர்ப்புகளைப்‌ பின்பற்றும்‌. நீதிமுறை மரபுகள்‌ குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, அரசாணை எண்‌ 31 தொடர்பான முரண்பட்ட தீர்ப்புகளை தீர்க்கும்‌ வகையில்‌, வரும்‌ சட்டமன்ற கூட்டத்‌ தொடரில்‌ இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின்‌ சமூக மற்றும்‌ கல்வி ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌, 2007 ஆம்‌ ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்‌ இடஒதுக்கீடு  சட்டத்தில்‌ தேவையான சட்டத்திருத்தக்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென இச்செயற்குழு கோருகிறது.

ஆர்‌.எஸ்‌.எஸ்‌.பாஜக இயக்கங்கள்‌ தங்களின்‌ மதவாத அரசியல்‌ நிகழ்ச்சி நிரலை இந்திய தேசிய அடையாளமாக மாற்றும்‌ முயற்சியில்‌ தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன்‌ ஒரு பகுதியாக, வந்தே மாதரம்‌ பாடலை தேசப்பற்றின்‌ அளவுகோலாகவும்‌, அதனைப்‌ பாடுவதை அரசியல்‌ மற்றும்‌ கருத்தியல்‌ விசுவாசத்தின்‌ அடையாளமாகவும்‌ மாற்ற முயற்சிப்பது மிகுந்த ஆபத்தான போக்காகும்‌. இந்திய அரசியலமைப்பானது குடிமக்களிடம்‌ நாட்டின்‌ மீது விசுவாசத்தையும்‌, அரசியலமைப்பின்‌ மீது பற்றுறுதியையும்‌ மட்டுமே கோருகிறது; மாறாக ஒரு குறிப்பிட்ட பாடல்‌, சின்னம்‌ அல்லது மதபண்பாட்டு அடையாளத்தின்‌ மீது கட்டாய விசுவாசத்தை அல்ல. எனவே, 'வந்தே மாதரம்‌ பாடலை கட்டாயப்படுத்துவதும, அதனைப்‌ பாடாதவர்களின்‌ தேசப்பற்றை சந்தேகிப்பது,இந்தியாவின்‌ மதச்சார்பின்மை மற்றும்‌ மனசாட்சி,சுதந்திரத்தின்‌ மீது  நடததப்படும்‌ நேரடியான தாக்குதலாகும்‌. கோடிக்கணக்கான மக்களால்‌ ஜனநாயக முறையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்‌ பிரதிநிறிகள்‌ மற்றும்‌ மாநில அரசுகள்கூட இந்தகைய கருத்தியல்‌ கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுவறு. இந்திய ஜனநாயகத்றிற்கும்‌ கூட்டாட்சித்‌ தத்துவத்திற்கும்‌ விடுக்கப்படும்‌ சவாலாகும்‌. எனவே, இச்செயற்குழு இந்தியாவின்‌ பன்முகத்துவம்‌, மதச்சார்பின்மை மற்றும்‌ அரசியலமைப்பின்‌ அடிப்படை விழுமியங்களின்‌ மீது நடத்தப்படும்‌ ஆர்‌.ஸ்‌.எஸ்‌.பாஜக கருத்தியல்‌ தாக்குதல்களை வன்மையாகக்‌ கண்டிப்பதுடன்‌, வந்தே மாதரம்‌ பாடலை அரசியல்‌ ஆயுதமாகப்‌ பயன்படுத்தும்‌ முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்‌. என்றும்‌, இந்திய ஒன்றியத்தின்‌ பன்மைத்துவ மற்றும்‌ கூட்டாட்சித்‌ தன்மையை பாதுகாக்க  ஐனநாயக, மதச்சார்பற்ற மற்றும்‌ முற்போக்கு சக்திகளும்‌ ஒன்றிணைந்து போராட வேண்டும்‌ என்றும்‌ இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வக்ப்‌ திருந்த சட்டத்தை தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்த மாட்டோம்‌. என்று சென்ற திமுக ஆட்சியில்‌ சட்டமன்றத்தில் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது. அதன்‌ அடிப்படையில்‌ தமிழ்நாடு வக்ப்‌ வாரியத்தில்‌ முஸ்லிமல்லாத உறுப்பினர்கள்‌ யாரும்‌ நியமிக்கப்படவில்லை. இதே நிலைப்பாட்டை புதிய ஆட்சியும்‌ கடைப்பிடிக்க வேண்டுமென்றும்‌ தமிழ்நாடு வக்ப்‌ வாரியத்திற்கு முழு தலைமை செயல்‌ அலுவலர்‌ நியமிக்கப்பட வேண்டுமென்றும்‌ இச்செயற்குழு கோருகின்றது.

25 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தங்களின்‌ தண்டனை காலத்‌தை நிறைவுசெய்த பின்னரும்‌ சிறைகளில்‌ அடைக்கப்பட்டுள்‌ள ழுஸ்லிம்‌ வாழ்நாள்‌ சிறைவாசிகளை உடனடியாக விடுதலைசெய்ய உறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்‌ கொள்கிறது.

தமிழகத்தின்‌ நெற்களஞ்சியமாக விளங்கும்‌ காவிரி, டெல்டா  மாவட்டங்கள்‌ தென்மேற்கு பருவமழை பொயத்ததாலும்‌, காவிரி நீர்‌ உரிய அளவில்‌,கிடைக்காததாலும்‌ கடுமையான வறட்சி மற்றும், வேளாண்‌ நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன என்பதை இச்செயற்குழு ஆழ்ந்த கவலையுடன்‌ பதிவு செய்கிறது. மேட்டூர்‌ அணை திறக்கப்படாதது. குறுவை. சாருபடி பரப்பளவு கடுமையாக குறைந்திருப்பது, நிலத்தடி நீரமட்ட சரிவு மின்வெட்டு மற்றும்‌ குறைந்த மின்னழுத்தம்‌ ஆகிய காரணங்களால்‌ விவசாயிகளும் விவசாயத்‌ தொழிலாளர்களும்‌ வாழ்வாதார நெருக்கடியில்‌ சிக்கியுள்ளனர்‌. குறிப்பாக தஞ்சாவூர்‌, திருவார்‌, நாகப்பட்டினம்‌ உள்ளிட்ட டெல்டா. மாவட்டங்களில்‌ ஆயிரக்கணக்கான விவசாயிகள்‌ பெரும்‌ இழப்பை சந்தித்துள்ளனர்‌. எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி  மாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்‌. குறுவை சாகுபடி செய்ய முடியாமல்‌ பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும்‌ ஏக்கருக்கு 15,000 வறட்சி நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌.

புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு சமையல்‌ எரிவாயு இணைப்பு சான்றை கட்டாயமாக்கியுளள தமிழ்நாடு அரசின்‌ நடைமுறை, ஏனழ மற்றும்‌ நடுத்தர மக்களுக்கும், புதிதாக தனிக் குடும்பமாக பிரியும்‌ இளம்‌ தம்பதிகளுக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும்‌ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எரிவாயு உருளை வினியோகத்தில்‌ நிலவி வரும்‌ தட்டுப்பாடு மற்றும்‌ புதிய இணைப்புகளை வழங்குவதில்‌ எரிவாயு முகமைகள்‌ எதிர்கொள்ளும் சிரமங்கள்‌ காரணமாக; பொதுமக்கள்‌ தங்களால்‌  கட்டுப்படுத்த முடியாத நிர்வாக காரணங்களுக்காக குடும்ப அட்டை பெறும்‌ உரிமையை இழக்க கூடாது என்று இத்தீரமானம வலியுறுத்துகிறது. எனவே, புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு சமையல்‌ எரிவாயு இணைப்பு சான்று சட்டாயம்‌ என்ற விதிமுறையை உடனடியாக தளர்த்த வேண்டும்‌ என செயற்குழு வலியுறுத்துகிறது

கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும்‌ பொழுது விசாரித்து ஒப்புதல்‌ தரவேண்டிய காவல்துறையினர்‌ பல்வேறு இடங்களில்‌ வரம்பு மீறும் செயலில்‌ ஈடுபடுவது செயற்குழுவின்‌ கவனத்திறகு கொண்டு வரப்பட்டது. இது உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்‌. கடவுச்சிடுககாக விண்ணபமிததவர்களை குறிப்பாக பெண்களை அலைக்கப்பது  நிறுத்தப்படவேண்டும். கடவுச்சிட்டுக்கான விசாரணை முறைகள்‌ எளிமையாக்கப்பட வேண்டும்‌ என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

 தமிழ்நாட்டின்‌ காவிரி கடைமடை மாவட்டங்களை பாலைவனமாக்கும்‌ நாசகர திட்டமான மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும்‌ என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. காவிரி நீர்ப்‌ பங்கீட்டில்‌ தமிழ்நாட்டின நியாயமான உரிமையைப்‌ பெற்றுத்தருவதில்‌ ஒன்றிய பா ஐ க அரசு கடமை தவறி ஓரவஞசனை செய்யக்கூடாது என செயற்குழு எச்சரிக்கிறது.

பாஜகவின்‌ கைப்பானையாக மாறி நாளுக்கு நாள் நம்பகத்தன்மையை இழந்து வரும்‌ இந்தியதேர்தல்‌ ஆணையத்தை செயற்குழு தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துக்‌ கண்டிக்கிறது.இனிவரும்‌ காலங்களில்‌ தேர்தல் ஆணையத்தின்‌ நம்பகத்தன்மையை பாதுகாக்கும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட  வேண்டும். இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக மாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு மீண்டும்‌ வாக்குச் சீட்டு முறைக்கு தேர்தல்‌ மாற்றியமைக்கப்பட வேண்டும்‌ என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

கலைஞர்‌ கனவு இல்லம்‌ வீடு கட்டும்‌ திட்டத்தில்‌ வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசாணை வழங்கப்பட்டு தற்போது பயனாளிகள்‌ வீடு கட்டியும அவர்களுக்கான மானியத்‌ தொகை லட்சத்தில்‌ இன்றும்‌ ஒரு தவனை தொகை கூட வழங்கப்படவில்லை இதனால்‌ பயனாளிகள்‌ மிகவும்‌ சிரமப்பட்டு வீட்டு வேலையை முடிக்காமல்‌ உள்ளனர்‌. தமிழ்நாடு அரசு. உடனடியாக இத்திட்டத்தின்‌பயனாளிகளுக்கு உரிய தொகையை விடுவிக்க வேண்டுமென இச்செயற்குழு வலியறுத்துகிறது.

மாதந்தோறும் மின் கட்டணம், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு, அயோத்தி ராமர்‌ கோயில்‌ நன்கொடை முறைகேடு, பல்கலைக்கழக துணைவேந்தர்‌ நியமனம்‌,காப்பீட்டுத்‌ திட்டத்தில்‌ தடையின்றி டயாலிசிஸ்‌ திரவ பைகள்‌ மீண்டும்‌ கிடைப்பதை உறுதி செய்தல், மாணவர்‌ பேரவைத்‌ தேர்தல் நடத்துதல், தென்காசியில்‌ அரசு மகளிர்‌ கல்லூரி நிறுவுதல்,  இலஞ்சி ரயில பாலம்‌ அமைத்தல், தென்காசி மாவட்டத்தில்‌ கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்‌ அவ்வலுவலகத்தை விரைவில் திறப்பது, எப்சிஆர்ஏ சட்டதிருத்தத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

Related

““2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றம் : பொள்ளாச்சியில் அண்ணாமலை பேச்சு”