ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே இன்று (நவ.3) அதிகாலை கரையை கடந்தது முரசு புயல். அப்போது மணிக்கு சுமார் 100 கி.மீ முதல் 120 கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசியது.

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் ஆந்திர பிரதேச கடற்கரையோர பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீன்பிடி படகுகளும் சேதம் அடைந்தன.

பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் கனமழை பதிவானது. இதனால் அந்தப் பகுதிகளில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதோடு தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே ஓங்கோலுக்கு அருகே இன்று அதிகாலை 3.30 - 5.30 மணி அளவில் முரசு புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று வலுவிழக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசு புயல் காரணமாக மசூலிப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, பிரகாசம், என்டிஆர் மாவட்டம் உட்பட ஆந்திராவின் பல்வேறு இடங்களில் கனமழை பதிவானது. இதனால் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Related

“தமிழகம்- ஆந்திரம் கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு குறித்த முதல்வர்கள் விஜய்-சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை”