சென்னை: தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு இருக்காது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க 6 மாதங்களுக்கு திமுகவினால் எந்த இடையூறும் இருக்காது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "திமுக, விரைவான ஓர் அரசியலமைப்பு நெருக்கடியையோ மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை. புதிதாக அமையவிருக்கும் அரசு, திமுக அரசின் திட்டங்களையும் தொடர வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமும் தொடரப்பட வேண்டும்.
இருப்பினும், பெண்களுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக விஜய் அளித்திருக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவது கடினம். நாங்கள் செய்ததுபோல, குறைந்தபட்சம் ரூ. 1,000 கொடுங்கள்.
2021 தேர்தலில் திமுகவின் வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாகவே, நீட் தேர்வு ரத்து போன்ற சிலவற்றைச் செய்ய முடியவில்லை.
இந்தத் தேர்தலிலும்கூட, எங்களால் நிறைவேற்றக் கூடியவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளித்தோம்.
ஆனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை தவெக வழங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி செய்தால், எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.