திருச்சி: 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131 வது பிறந்த தினத்தை (05.06.2026) முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

முஸ்லிம் மாணவர் பேரவை  திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வி. மைதீன் சிராஜீதீன் தலைமையில் பேரையூர் பேரூராட்சியில் உள்ள அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பணியாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர் அணி நிர்வாகிகள்  ஏ. முஹம்மது இலியாஸ், பா. பரீத் அஸ்லம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related

“கோவில்பட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!”