தூத்துக்குடியில் நேற்று இரவு கணேஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாட்டு இறைச்சி கடை வியாபாரி பாலகிருஷ்ணன் என்பவரை வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி தங்க மோதிரத்தை பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்தவர் ஹரி பாலகிருஷ்ணன் (50). இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் ஜிம்கானா கிளப் எதிரே சொந்தமாக மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு 11.00 மணியளவில் ஹரி பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்திலா சென்று கொண்டிருந்தார். அவர் கணேஷ் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு அருகில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 இளைஞர்கள் ஹரி பாலகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி முகவரி கேட்பது போல் நடித்து அவரை வழிமறித்துள்ளனர்.
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்களில் இரண்டு பேர் தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரி பாலகிருஷ்ணனின் தலையின் பின்பகுதி மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினர். இதில் தப்பி ஓடி சிறிது தூரம் சென்றுள்ளார் ஆனால் விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல் அவருடன் மல்லு கட்டி உள்ளது இதில் அவரது கையில் இருந்த 6 கிராம் தங்க மோதிரத்தையும் அந்த கும்பல் பறித்து சென்று விட்டது.
ரத்த வெள்ளத்தில் இருந்த ஹரி பாலகிருஷ்ணன் உடனடியாக ரத்தம் சொட்ட சொட்ட தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர அறுவறுத்தி உள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹரி பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.