தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் ஆபிசர் அசோசியேசன் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கி-யின் கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் அலுவல் பணி காரணமாக கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி வீர்பாண்டியன் பட்டினம் பிரசாத் நகர் பகுதிக்கு சென்ற இடத்தில் சில குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

இது சம்பந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் சம்பந்தமாக இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமலும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாததை கண்டித்தும் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபிசர்ஸ் அசோசியேசன் சங்கங்கள் இணைந்து தூத்துக்குடி விவிடி சிக்னலில் கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.