தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே அசோசியேஷன் மற்றும் மாஸ்டர் ஆர்.கே.பறக்கும்படை அகாடமி ஒருங்கிணைப்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 50 மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 5 வயது முதல் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 30க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகளுக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுக்கோட்டை ஸ்ரீலலிதா வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளி முதல் இடத்தையும், தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீசாரதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 2ஆம் இடத்தையும், மில்லர்புரம் செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 3ஆம் இடத்தையும், செயின்ட் ஆண்டனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 4ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விக்டோரியா சி.பி.எஸ்.சி. பள்ளி முதல்வர் டி.ஜெகநாதன் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு, தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்க செயலாளரும், மாஸ்டர் ஆர்.கே.பறக்கும்படை அகாடமியின் நிறுவனருமான மாஸ்டர் ரத்னகுமார், துணைச்செயலாளர் ஆனந்த், திருநெல்வேலி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்க செயலாளர் சுபகணேஷ் ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள் சரவணகுமார், சுபாஷ் விஷ்ணுகுமார் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.