தசரா திருவிழாவை முன்னிட்டு விசைபடகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை இதனால் 260-விசைபடகுகள் மீன்பிடி விசைபடகு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது 10-நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை இரவு நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை இதனால் தூத்துக்குடி விசைபடகு துறைமுகத்தில் சுமார் 260-விசைபடகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related

“துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் ”