தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி அனுமதியின்றி அரசு மதுரா கோட்ஸ் கட்டிடங்கள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மதுரா கோட்ஸ்  அரசு நில மீட்பு குழு சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில் எந்தவித அனுமதியும் இன்றி அரசு புறம்போக்குநிலம் என்று அரசு ஆவணங்களில் கூறியுள்ள இடத்தை எவ்வித கிரைய பத்திரமும் இன்றி பல முறைகேடான ஆவணங்களை வைத்து ஒப்பந்த பத்திரத்தின் மூலம் இந்த கட்டிடத்தை இடித்து வருகின்றனர். 

மேலும் இது சுதந்திர போராட்ட தியாகி ஐயா வஉசி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சிவா தலைமையில் 1908ஆம் ஆண்டு ஆசியாவில் தொழிற்சங்கமே இல்லாத நேரத்தில் இந்த கோரல் மில் (மதுரா கோட்ஸ் மில்) ற்காக போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டனர். 

இப்படி வரலாற்று சிறப்புமிக்க இடத்தை முழுவதுமாக இடித்தவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மனுவை கொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநிலத் தலைவர் சாமு காந்தி, புரட்சி பாரதம் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், சமூக செயல்பாட்டாளர்  ஜான் பி. ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related

“ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை சார்பில் 25 பேர் இலவச உம்ரா பயணம்!”