தூத்துக்குடி : பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் ஒன்பதாவது வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநிலச் செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஏற்கனவே இருந்த அரசுகள் நிறைவேற்றாத பழைய பென்ஷன் திட்டத்தை புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் முறையாக வழங்க வேண்டும். சிகிச்சைக்காக பணம் பிடித்தம் செய்யக் கூடாது மேலும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையாக 7850 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கான தொகையில் பிடித்தம் செய்யும் காலத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மற்ற பேரவை மாவட்ட பேரவை கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.