தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு சவேரியார் புரம் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தினால் மரக்கிளையை வெட்ட சென்ற சுடலை மணி மேலிருந்து கீழே விழுந்ததில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு சவேரியார் புரத்தை சார்ந்தவர் முனியசாமி இவரது மகன் சுடலைமணி இவர் கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் சுடலைமணி வீட்டிற்கு எதிரே உள்ள மின்வாரிய கம்பத்தில் மரக்கிளை உரசுவதால் கரண்ட் அடிக்கடி கட்டாகி விடுவதாக எதிர் வீட்டினர் தகவல் கொடுத்தனர். ஆகவே அந்த மரக்கிளையை வெட்ட வேண்டும் என கூறிய அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து சுடலைமணி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது கீழே இருந்த மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளையில் கட்டியிருந்த கயிரை இழுத்ததாக கூறப்படுகிறது அப்போது மரம் ஒடிந்து விழுந்த போது சுடலைமணியும் மேலே இருந்து கீழே விழுந்து உள்ளார். கீழே விழுந்த அவர் சுய நினைவு இல்லாமல் விழுந்த நிலையில் அவரது வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மாரியம்மாள் ஓடோடி வந்து பார்த்தபோது சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு தொடர்ந்து கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சிறுபாடு கிராமத்தில் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து போலீசாருடன் அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
உயிரிழந்த சுடலை மணிக்கு 21 வயதான மாற்றுத்திறனாளி மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த சுடலைமணியின் வருமானத்தை நம்பியே அந்த குடும்பம் இருந்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.