திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலசேவைகள் சங்கம் மாநில தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் சம்பவத்திற்கு நீதி கேட்டு முழக்கமிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாடத்தில் மாற்றுத்திறனாளிகள், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.