திருப்பத்தூர் :  திருப்பத்தூர்  மாவட்டம் திருப்பத்தூர் டவுன்  எஸ்ஆர்கே  கன்வென்சன் ஹாலில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் சார்பாக  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில்  பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி கல்வி ஊக்கத்தொகையையும் மற்றும் நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.  விழாவில் ACRPF அமைப்பின் மாநில தலைவர் மக்கள் சேவகர் எல். அப்பாதுரை தலைமையேற்று  குத்துவிளக்கு ஏற்றினார்.  திருப்பத்தூர்  மாவட்ட அளவில் கடந்த பொது தேர்வில் பத்தாம் மற்றும் 12 ம் வகுப்பில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி ஊக்க தொகையாக   ரூபாய் 5000 மும்  இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும் ரு.4000 ம்  மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கும் ரு3000 ம் 10 மாணவ மாணவிகளுக்கு வழங்கியும் சால்வை அணிவித்து  கேடயம் வழங்கி பாராட்டினார்.   

மேலும் சிறப்பான கல்வி சேவையை வழங்கிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொளரவப்படுத்தி  பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து ஷீல்டு வழங்கபட்டது. மேலும்  நலிந்த மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள் குழந்தைகள் பெண்களுக்கு  ஊட்டச்சத்து மற்றும் மளிகை பொருட்கள் ரூபாய் 3000 மதிப்பில் 10 நபர்களுக்கு வழங்கினார். 

மேலும் கல்வி உதவியாக மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் நோட்டு புத்தகங்கள் உபகரணங்கள் வழங்கி விழாவில் அனைத்து நுகர்வோர் உரிமைகளும் பாதுகாக்கபட  வேண்டும் என்று  தெரிவித்து சிறப்புரையாற்றினார். விழாவின் துவக்கமாக திருப்பத்தூர்  மாவட்ட ACRPF தலைவர் சேட்டு  வரவேற்புரை ஆற்றினார்.  

மேலும் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம்,  மாநில துணை செயலாளர் சேகர் மாணவ மாணவிகளுக்கு  வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்தார்கள்.   நிகழ்வின் இறுதியாக திருப்பத்தூர்  மாவட்ட ACRPF அமைப்பின்  மாவட்ட செயலாளர் இளவரசி  அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.  விழாவில் திருப்பத்தூர்  ஊர் பொதுமக்களும் ACTPF  நிர்வாகிகள் , உறுப்பினர்கள்   மற்றும் பயனாளிகள் என  500 பேருக்கும்  அதிகமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”