தேனி -உத்தமபாளையம்: தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் குற்றங்களை கண்டித்து தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பெண்கள், முதியவர்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இது போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான 'மரண தண்டனை' வழங்க வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உத்தமபாளையம் புறா கூண்டு பகுதியில் தொடங்கிய இந்த பேரணியில், இஸ்லாமியப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கும்  மேற்பட்டோர் கைகளில் கண்டன பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டபடி வந்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி தேரடி பூக்கடை வீதி கிராம சாவடி வழியாக நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பைபாஸ் பகுதியில் ஒன்று கூடி நின்று கண்டன கோஷங்களை எழுப்பி  பேரணியை நிறைவு செய்தனர் .

Related

“ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை சார்பில் 25 பேர் இலவச உம்ரா பயணம்!”