தேனி, சின்னமனூர் : தேனி மாவட்டம், சின்னமனூரில் உத்தமபாளையம் தனியார் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.

சின்னமனூர் நகரில் உள்ள எரசக்கநாயக்கனூர் பிரிவில் தொடங்கிய இந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு  பேரணியை பள்ளியின் தாளாளர் முகமது அபூபக்கர் சித்திக் தலைமையில்  சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முஜீப் ரஹ்மான் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

700 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு  போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகளை கைகளில் ஏந்தி போதை பொருள் தடுப்பு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பி நகரின் முக்கிய வீதிகளான 

செக்கான் முக்கு, கண்ணாடி கடை முக்கு, தேரடி உள்ளிட்ட  பல்வேறு நகரின்  முக்கிய வீதிகளில்  ஊர்வலமாக வந்தனர்.  

அதனைத் தொடர்ந்து சின்னமனூர் காவல் நிலையம் முன்பு

பேரணியை முடித்துவிட்டு போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

 இந்தப் பேரணி ஊர்வலத்தில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Related

“சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!”