தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும், திரையுலகினரும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குழந்தை வரம் வேண்டி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டதோடு, ஏழு வகையான உணவுகளும் அன்னதானமாக வழங்கப்பட்டன.
மேலும், இவ்விழாவில் வெளி மாவட்டங்களிலிருந்தும், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.