தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி எதிரில் வசந்தம் ரெசிடென்சி காம்ப்ளக்ஸில் புதிய உதயமாக 'பிரியாணி கிங்' அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த புதிய பிரியாணி கிங்" அசைவ உணவகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் எம்.என்.துரை கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் உணவகத்தின் நிர்வாக இயக்குனர்கள் சுதாகர், ரஜினி மற்றும் வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது. இங்கு ஹலால் முறையில் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, எம்டி பிரியாணி, சிக்கன் மினி மற்றும் பேமிலி பக்கெட் பிரியாணி, மட்டன் மினி மற்றும் பேமிலி பக்கெட் பிரியாணி வகைகள் குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் கிடைக்கிறது. 

மேலும், சைனீஸ் வகைகளான வெஜ் பிரைடு ரைஸ், சிக்கன் பிரைடு ரைஸ், மட்டன் பிரைடு ரைஸ், பிரான் பிரைடு ரைஸ், சவர்மா, சிக்கன்- வெஜ் கிரேவி வகைகள், சிக்கன் மற்றும் வெஜ் ஸ்டார்டர்ஸ். பிரான் வகைகள், மீன் வகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான உணவுகளும் சுடச்சுட, கம.. கம.. வாசனையுடன் இனிய சுவையில் வாடிக்கையாளர் களுக்கு தரமானதாக வழங்கி வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து அமோக ஆதரவு அளிக்குமாறு உணவகத்தின் நிர்வாக இயக்குனர்கள் சுதாகர், ரஜினி கேட்டுக் கொண்டனர்.

Related

“திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!”