சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்த வகிதா ரஹீம் என்பவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று மானாமதுரைக்கு திரும்பி வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டின் உள்புற கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததுடன், வீட்டில் வைத்திருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து அவர் உடனடியாக மானாமதுரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆய்வுக்குப் பின்னரே வீட்டில் இருந்து எவ்வளவு மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து முழுமையான விவரம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

“ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை சார்பில் 25 பேர் இலவச உம்ரா பயணம்!”