சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரைச் சேர்ந்தவர் கவுசல்யா வயது  29. மீன் வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் பள்ளத்தூர் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்து ஒருவர், மீன் விலையை கேட்டு கவுசல்யாவை  ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல்  அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட  நபரை விசாரித்த போது அவர் தேவகோட்டை நெடுங்குளம் வி.ஏ.ஓ., ரமேஷ் 44. என்பது தெரிய வந்தது. கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related

“திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!”