சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி 8-வது வார்டு வேட்டையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 273 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ,16 ம் தேதி மாலை தலைமை ஆசியர் பள்ளி மாணவர்களை வைத்து பயன்பாட்டில் இல்லாத பூட்டப்பட்டிருந்த பள்ளி கட்டிடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், ஆசிரியர் வருகை பதிவேடு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஷூக்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி, வீதியில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வருகை பதிவேடு, மழையில் நனைந்த புத்தகங்களை எரித்து அந்த குப்பைகளை மாணவர்களை வைத்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தேவகோட்டை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் பள்ளிக்கு வருகை தந்து புத்தகங்களை எரித்த இடம், புத்தகங்கள், வருகை பதிவேடுகள், ஷூக்கள் தூக்கி எரிந்த இடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்த பின் பள்ளிக்குள் சென்று மாணவர்களை கூப்பிட்டு விசாரணை செய்தார். பின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் இருவரையும் மாணவர்களை வைத்து வேலை வாங்கலாமா, படிக்க வருகிறார்களா, வேலை பார்க்க வருகிறார்களா, பெற்றோர்கள் மாணவர்கள் வேலை பார்ப்பதை பார்த்தால் அவர்களின் மனநிலை என்ன என லெப்ட் ரைட் வாங்கினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது தந்தை இல்லை என ஒரு மாணவன் சொல்ல இந்த மாதிரி பிள்ளைகள் தான் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் இந்த குழந்தையை நீங்கள் நல்ல நிலமைக்கு உருவாக்க வேண்டும் ஆனால் உங்களுக்கு எப்படி மனசு வந்தது வேலை வாங்க, நாம கை நிறைய சம்பளம் வாங்குகிறோம் வேலைக்கு ஆள் போட்டு செய்யலாமே என லெப்ட் ரைட் வாங்கினார். மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றிய ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவகோட்டை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Related

“ விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!”