சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, வைகை ஆற்றங்கரையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு தொல்லை மற்றும் நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாகவும், மழைக்காலங்களில் இக்கழிவுகள் வைகை ஆற்றில் கலந்து நீரின் தரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆற்றங்கரையில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, குப்பை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை பலகைகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

“மில்லத் நகர், வ.களத்தூர் முன்னாள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி 4-ஆம் ஆண்டு முப்பெரும் விழா ”