சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபலமான கோல்டன் ஹவுஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

நேற்று இரவு வழக்கம் போல் 9.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு மின் கசிவு ஏற்படாமல் இருப்பதற்காக வழக்கம் போல் மெயின் மின்சார சுவிட்சை ஆப் செய்து விட்டு சென்றுள்ளனர். மேலும் கடையில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் கடையை நிர்வாகித்து வரும் சிவானந்த முருகன் என்பவர் கடையை திறக்க வந்த போது கடையில் இரண்டாவது மாடி வழியாக லிப்ட் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் கீழ் தளத்தில் உள்ள கல்லாபெட்டி  உடைக்கப்பட்டுள்ளதையும் பார்த்துள்ளார் மேலும் கல்லாவில் வைத்து சென்று இருந்த ரூபாய் 4, 25,213 திருட்டு போயிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து   சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு  மோப்ப நாயுடன் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பழைய பேருந்து நிலையத்தில் டவுன் காவல் நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாநகர துணை ஆணையாளர் அருகில் உள்ள இந்த துணிக்கடையில் திருட்டுப் போய் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

“50 ஆசிரியர்களுக்கு பெரி பெருமை விருதுகளை வழங்கிய சட்டபேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் !”