சேலம் இரும்பாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுவரும் இவர்களுக்கு சொற்ப அளவிலான சம்பளமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென இரும்பாலை மூன்றாவது கேட் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரும்பாலை நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் வழங்க வேண்டும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் பாரபட்சமின்றி நிர்வாகம் செயல்பட வேண்டும் ஊதிய உயர்வில் முரண்பாடு கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறும்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணியாற்றி வருவதாகவும் சொற்ப அளவிலான சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் சம்பளத்தை உயர்த்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இது பெரும் மன உளைச்சலை ஆளாக்கி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினர்.
எனவே நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.