பெரம்பலூர் மாவட்டம், மில்லத் நகர், வ.களத்தூர்  முன்னாள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணியினரின் 4-ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.

கல்வி விழிப்புணர்வு ,அரசு வேலை வாய்ப்பு வழிகாட்டி, 2025-2026-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பட்டதாரிகள், விளையாட்டு அணி மற்றும் நபர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஈத்கா திடலில் நடைபெற்றது. 

வ.களத்தூர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சபா.சிலம்பரசன்,  சமூக நீதி படைப்பாளர்கள் சங்கம் மாநில ஒருங்கினைப்பாளர் அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக மதுரை சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனர் எஸ். முஹம்மது ஜலீல்,

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் பொதுச்செயலாளர் பேராசிரியர் சே.மு.மு. முகமதலிமுன்னாள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ. முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை மில்லத் நகர், வ.களத்தூர் முன்னாள் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி புஷ்ரா நல அறக்கட்டளை மற்றும்  இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையினர் செய்திருந்தனர். 

Related

“மடப்புரம் வைகை கரையில் குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்”