தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே, விசுவாசபுரம் கிராமத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மனுக்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ வழிபாடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விசுவாசபுரம் கிராமம். இங்கு 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. விசுவாசபுரம் கிராம மக்களின் முக்கிய வழிபாட்டு தெய்வமாக கருதப்படும் இங்கு இன்று ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சுமார் 21 வகைகளுக்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட இனிப்பு வகைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள லட்டு ரவா லட்டு தேங்காய் பர்பி தேங்காய் லட்டு அதிரசம் ஜிலேபி கடலை மிட்டாய் போன்ற 21 வகைகளுக்கு மேற்பட்ட இனிப்பு வகைகள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொண்டு பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆலய கருவறை மற்றும் அம்மனுக்கு முழுவதும் இனிப்பு வகைகளை அலங்காரம் செய்யப்பட்டது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களுடைய ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இனிப்பு வகைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனுக்கு  பல்வேறு வகை சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தின் சார்பாக கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பவள மணி மாலை மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related

“வங்கி ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்”