மயிலாடுதுறை நீடூர் கங்கண புத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித்தர்மா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராக இருந்த தலித் தர்மா மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் தன்னை முன்னிறுத்தி மக்களுக்காக சமூக ரீதியான பணிகளைச் செய்திருக்கிறார், தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் ஆலோசனை செய்து வயதானவர், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து வகையான மக்களையும் அழைத்துச் சென்று அவர்களுடைய தேர்தல் கடமைகளை ஆற்றுவதற்கு தலித் தர்மா உதவி செய்திருக்கிறார்.
பொதுமக்களின் தேவைகளான தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து போன்ற தேவைகளுக்கு போராட்டம் நடத்தி அதிலும் மக்களுக்காக உரிமைகளை பெற்று தந்து வருகிறார் தலித் தர்மா. இந்நிலையில் தற்போது தலித் தர்மாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை, மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.