மயிலாடுதுறையில் இரவு நேரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 குற்றவாளிகள் 12 மணி நேரத்திற்குள் கைது

மணல்மேடு காவல் சரகம், இராதநல்லூர், மெயின்ரோட்டில் வரும் ராணி (வயது 48), க/பெ. ராஜசேகர் என்பவர் கடந்த 07.08.2026ந் தேதி இரவு தனது வீட்டினை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று மறுநாள் 08.08.2026ந் தேதி காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த 96 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவும், வழக்கில் திருடு போன சொத்துக்களை மீட்கவும், மணல்மேடு காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

அதன்படி வழக்கின் தொடர் விசாரணையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மணல்மேடு சரித்திர பதிவேடு குற்றவாளியான 1. ரஜினி (52), த/பெ. தங்கராசு, தாழ்சேரி, கொற்கை, 2. குமார் (34), த/பெ. மாரியப்பன், வத்தலகுண்டு, திண்டுக்கல், 3. சுபாஷ் (29), த/பெ. ஜெயபிரகாஷ், தொட்டியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கில் திருடு போன சொத்துக்கள் மீட்க்கப்பட்டன.

பின்னர் மூன்று குற்றவாலிகளும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு 24 மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்தமைக்காக மணல்மேடு காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நரசிம்மபாரதி தலைமையிலான மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படை மற்றும் மணல்மேடு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா வெகுவாக பாராட்டினார்.

Related

“திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!”