நாட்டின் 80 வது சுதந்திர தின விழா மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயனாளிகளுக்கு 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாட்டின் 80 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திரத்தை வளர்க்கும் வகையில் வண்ண பலூன்கள்  பறக்க விடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் 197 பயனாளிகளுக்கு  25 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தியாகிகளை கௌரவம் செய்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Related

“மடப்புரம் வைகை கரையில் குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்”