சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி போஜன நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ் பங்கேற்றார்.
நாட்டில் 80 - வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எனப்படும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் முகமது ஜமால் யூனஸ் அவர்களுடைய கச்சினர்களான காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்ந்த மகளிர் மற்றும் கட்சியினர் விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினார்கள் இதில் ஆலய நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மதிய உணவக வழங்கப்பட்டு வந்த இந்த அன்னதான நிகழ்ச்சிகள் 200 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உணவு அருந்தி பெருமாளை வழிபட்டு சென்றனர்.

முன்னதாக மயிலாடுதுறையில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.
மயிலாடுதுறை மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் குட்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நகர மன்றம் உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் துப்புர பணியாளர்கள் ஓட்டுநர்கள் நகராட்சி அலுவலர்கள் நகரமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.