கோவில்பட்டி: தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, 2026-2027ஆம் கல்வியாண்டிற்காக 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூ மற்றும் சாக்லேட் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இரண்டு மாத விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்குத் திரும்பிய மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிக்கு வந்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.