கோவில்பட்டி, ஆக.1- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் சாலை அமைக்கும் பணியை செய்திட கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் ஐந்து நீதிமன்றங்கள், சார் ஆட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கருவூலம், வணிக வரித்துறை, தொலைபேசி, போக்குவரத்து காவல் துறை, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் உட்பட அரசு அலுவலகங்களும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறைத்துறை போன்றவைகளும் செயல்பட்டு வருகிறது.பல நூற்றுக்கணக்கான பொது மக்களும், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும், மாணவ, மாணவிகளும் இச்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இச்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாய் பல ஆண்டுகளாக உள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் இச்சாலையை செப்பனிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக அதற்கான அரசு ஆணையை அரசு தரப்பில் தரவேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சார் ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.