பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார்.  இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் முருகன் கருத்துரை வழங்கினார்.முனியன்,
முனிராஜன்,கிருஷ்ணன், வெங்கடேசன்,ராஜாமணி, கருப்புசாமி,செல்வராஜ், குணசேகரன் இறுதியில் ரங்கநாதன் நன்றியுரை கூறினார்.

கோரிக்கைகளான அரசின் எட்டாவது ஊதியக்குழு அமைப்பின் ஓய்வூதியர்கள் தொடர்பாக ஒரு நிலை கொண்டு ஓய்வூதியர் அமைப்புகள் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து இதுவரை ஊதிய குழுக்களில் பெற்று வந்த ஓய்வூதிய உயர்வினை வழங்க வேண்டும்,

ஓய்வூதிய சீரமைப்பு என்ற பெயரில் ஓய்வூதியர்கள் இடையில் பிரிவினையை உருவாக்கும் 25 -3 -2025 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை 1.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related

“சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா – மாணவர்களிடம் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு”