கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் ஜாதி மத வேறுபாடுகள் இன்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவின் போது தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திரு உருவப் படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.