கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரிஅருகே உள்ள தாசரப்பள்ளி ஊர் மாரியம்மன் திருவிழாவினை முன்னிட்டு கிராம மக்கள் யாவரும் நலமுடன் வாழ வேண்டியும், வறண்ட ஏரிகள் நிரம்ப மழை வேண்டியும், அம்மன் கரகத்துடன் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசரப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் மக்கள் யாவரும் நலமுடன் வாழ வேண்டி கிராம தெய்வங்களை சாந்தப் படுத்தும் விதமாக ஊர் மாரியம்மன் திருவிழா நடத்துவதை கடந்த பல தலைமுறைகளாக கடைப்பிடத்து வருகின்றனர்.

இதே போல் இந்த ஆண்டும் தாசரப்பள்ளி ஊர் மாரியம்மன் திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. கங்கனம் கட்டுதலுடன் மாவிளக்கு எடுத்தல், தீமிதித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் துவங்கி நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான அம்மன் கரகம் எடுத்தல் வீடு வீடாக சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஊர் மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து அம்மன் கரகங்களுடன் துவங்கிய இந்த விழாவில் மாவிளக்கு எடுத்துக்கொண்டுஏராளமான பெண்கள் தாசரபள்ளி பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறுப்பகுதிகள் வழியாக சென்ற அம்மன் கரகம் காவல் தெய்வங்களாக மண்டு மாரியம்மன்,கருமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்களை சாந்தப்படுத்தும் விதமாக பூஜைகள் செய்தும் வழிப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல் தெய்வகங்கைளை சாந்தப் படுத்தும் விதமாகவும், கிராம மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், மழை இன்றி வறண்டு கிடக்கும் ஏரிகள் நிரம்பி விவசாயச செழித்திட, நோய்களில் இருந்து கிராம மக்கள் யாவரும் நோய் நொடிகள் இன்றி நீண்ட ஆயுள்களுடன் வாழ வேண்டி வழிப்பட்டனர்.
பின்னர் மண்டு மாரியம்மன், மற்றும் கருமாரியம்மன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், கற்பூர தீபாதரனைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராம தெய்வங்களை சாந்தப் படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் ஏராளமான கிராமமக்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் முருகன், மந்திரிகவுண்டர் சின்னசாமி, வரிகவுண்டர்கள் ரவி ஐய்யர்,ராமராஜ், எல்லப்பன், வெள்ளியப்பன், தீர்த்தகிரி, முருகன், ராமசாமி, இரத்தினம் மற்றும் தாசரப்பள்ளி சேர்ந்த கிராம மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.