கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட்டில் 80-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள  விஜய் இன்ஸ்டியூட்டில் 80-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இன்ஸ்டியூட்டின் தாளாளரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான துரை என்கிற துரைசாமி  தலைமை வகித்தார். இந்த விழாவின் போது சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியின் திரு உருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டியூட்டில் முதல்வர் செல்வி பிரியதர்ஷினி தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்த விழா ஏற்பாடுகளை ஆசிரியர் முகமது ஷெரீப், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர், 
 இவ்விழாவில் முதலாம் ஆண்டு சேர்ந்த டிகிரி மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நித்யா மற்றும் குரு பிரசாத் சுதந்திர தின  வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நன்றி கூறினர்.

Related

“மடப்புரம் வைகை கரையில் குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்”