கிருஷ்ணகிரி: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் துவக்கி வைத்து பள்ளி வயது குழந்ததைகளை கட்டாயம்பள்ளியில் சேர்க்க வழியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவக்கி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் கொடியசைத்து துவக்கி பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்,

இதனைத் தொடர்ந்து லண்டன் பேட்டை , பிஎஸ்என்எல் அலுவலகம் பெங்களுர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலை வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியின் போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுமதிக்க கூடாது, குழந்தைகளின் உரிமைகளை காக்க வேண்டும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும், குழந்தை வருமானம் குடும்பத்துக்கு அவமானம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்பு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பெது மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியின் போது தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, பன்னீர்செல்வம், மோகன் குமார், மெர்ஸி லீமா ரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.