கோவில்பட்டி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், மாசு கட்டுப்பாட்டு தினம், உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பசுமை தூய்மை இயக்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரமைப்பு, அகில இந்திய  கட்டுநர் சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சைக்கிள் மிதத்தல் அவசியம் மற்றும் நடைபயிற்சியின் பயன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. 

கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலக முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். டிஎஸ்பி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி  புது ரோடு, மார்க்கெட் சாலை, மெயின் ரோடு வழியாக கோவில்பட்டி பயணியர் விடுதியில் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் சைக்கிளுடனும், நடந்தவாறும் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

Related

“கண்ணியமிகு காயிதேமில்லத் பிறந்தநாள்: திருச்சி முஸ்லிம் மாணவர் பேரவை நலத்திட்ட உதவி வழங்கல்!”