தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று  52 பயணிகளுடன் புதியம்புத்தூருக்கு  சென்றது. 

கோவில்பட்டி மாதாங் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து ஆக்சிலேட்டரில் திடீரென பழுது ஏற்பட்டு அரசு பேருந்து நடு சாலையில் நின்றது. இதையெடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  

சாலையின் இருபறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல்  போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தினை சீர் செய்தனர். அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து  பழுது ஏற்பட்ட அரசு பேருந்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பழுதினை சரி செய்து அரசு பேருந்தை எடுத்துச் சென்றனர். மாதாங்கோவில் சாலை என்பது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை, அரசு பேருந்து நடு சாலையில் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

Related

“தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் - 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு”