12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (57) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார்.
ரவிசங்கரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,500/- அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.