வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில்  கோவில்பட்டி வ உ சி பள்ளி  மைதானத்தில் வைத்து  ஹாக்கி மட்டைகள், ஹாக்கி விளையாட்டுக்குரிய உபகரணங்கள் ஆகியவற்றை வைத்து  பூஜைகள் செய்து ஆயுத பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடினர். மேலும் ஹாக்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கும் இனிப்புகள் மற்றும்  உணவு வழங்கினர்.

Related

“தூத்துக்குடியில் தசரா திருவிழா-விசைபடகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை! ”