ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்வாரியம் அறிவித்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், மின்உற்பத்தி, மின் வழித்தடங்கள் திட்டங்களை PPP முறையில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்,5 ஆண்டு ஒப்பந்த முறை Fixed Term Employment ( FTE ) முறையை திரும்ப பெறு வேண்டும், அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி தொகை ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தியதை போன்று மின்வாரிய பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்கிட வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு குடும்ப நலநிதி ரூபாய் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தியதை மின் வாரிய பணியாளர்களுக்கு 01.09.2021 முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும் வாரிய ஆணை எண் 2 -ஐ ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.