ஆறு கடைகளுக்கு அபராதம். 10 லிட்டர் எண்ணெய், அதிக நிறமி கொண்ட இறைச்சிகள் மற்றும் காளான் பறிமுதல்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டையாபுரம் சாலை, புது ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர உணவு கடைகளில் கோவில்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறித்தும், உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அதிக நிறிமிகள், ஏற்கனவே பயன்படுத்தி எண்ணெய் பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதித்தனர். 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 10 லிட்டர் எண்ணெய், அதிக நிறமிகள் கொண்ட இறைச்சிகள், காளான் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.